இலங்கை ஏதிலிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்!

இலங்கை ஏதிலிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, அதனை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ரவிகுமார் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள, இலங்கை ஏதிலிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சின், முறையான பயண ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் எனவும் சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.