இந்திய மாலுமிகள் 15 பேருடன் கப்பல் கடத்தல் - ஐ.என்.எஸ். சென்னை விரைகிறது!
இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதியில் கடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்துள்ளது.
லைபீரிய நாட்டின் கொடியுடன் ‛எம்.வி லிலா நார்போல்க்' என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதி அருகே கடத்தப்பட்டதாக, இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த கடற்படை விமானம் ஒன்று, அந்த கப்பலை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
அத்துடன் அந்த கப்பலில் உள்ள தலைவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி பயணிக்கின்றது.