நடிகர் விஜய் இலங்கை வருவதில் சிக்கல்? இலங்கையை அழிப்பதாக பேசியதால் சர்ச்சை!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 'The GOAT' என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார்.

நடிகர் விஜய் இலங்கை வருவதில் சிக்கல்? இலங்கையை அழிப்பதாக பேசியதால் சர்ச்சை!

இந்த திரைப்படத்தில் யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜீ , சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதனையடுத்து, புதுவருடத்தை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.

இந்தநிலையில், தளபதி - 68 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வருவது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி வந்தன.

இந்தநிலையில், நடிகர் விஜய் இலங்கை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையை உலக வரைப்படத்தில் இருந்து நீக்குவதாக எச்சரிக்கும் வகையில் பேசிய காணொளிகள் மீள பகிரப்பட்டு வந்தன.

இதனை அவதானித்த சினிமா விமர்சகர்கள் நடிகர் விஜய்யின் வருகையை இலங்கையர்கள் சிலர் எதிர்க்கக்கூடும் எனவும், அதேவேளை விஜய்யின் வருகையை சினிமா ரசிகர்கள் என்ற வகையில் பலர் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் அண்மையில் விஜயகாந்தின் இறுதி சடங்குகளுக்கு சென்றிருந்த வேளையில் சிலர் அவர் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.