தமிழக முதலமைச்சருக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.