உலக சாதனை நிகழ்த்திய மலர்க்கண்ணன் பதிப்பகம் 

உலக சாதனை நிகழ்த்திய மலர்க்கண்ணன் பதிப்பகம் 

மார்ச் 17, 2024. திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒரே மேடையில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 71 நூலாசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை லயனிஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. 
விழாவில் கலைமாமணி வி. ஜி.சந்தோசம் அவர்களின் தலைமை ஏற்றார். கலைமாமணி வி.கே.டி.பாலன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சி.ஆர்.பாஸ்கரன், பேரா.தமிழ் இயலன்,
புலவர் தருமன் நடராசன், படைக்களப்  பாவலர் துறை.மூர்த்தி,  வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன், கவிஞர் தேன்மொழி ஆகியோர் வருகை தந்து சிறப்புரையாற்றினர்.

 மேலும் தமிழகம் எங்குமிருந்து  நூலாசிரியர்கள் வருகை தந்திருந்தனர்.  ஏற்கனவே பெப்ரவரி மாதம் ஆழ்கடலில் சினிமாவுக்கான கதைச் சுருக்கத்தை எழுதி உலக சாதனை புரிந்த கவிஞர் க. மணிஎழிலனின் இரண்டாவது உலக சாதனையாக இந்த விழா அமைந்தது. 

 கவிஞர் க. மணிஎழிலன்  ஏற்புரையை வழங்க, நன்றியுரை முனைவர் பிரியதர்ஷினி வழங்கினார். தொகுப்புரையை  திருமதி வைஷ்ணவி வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை செல்வி ம.பவித்ரா ஶ்ரீ மற்றும் ம.மைத்ரா பாடினர். 71 நூலாசிரியர்கள் எழுதிய 91 நூல்களை  மே மாதம் 5 ஆம் திகதி  மலேசியாவில் வெளியிட உள்ளதாக பதிப்பாசிரியர் கவிஞர் க.மணிஎழிலன் தெரிவித்தார்.