ஓட்டுநர் இன்றி 70 கிலோமீற்றர் தூரம் வரை பயணித்த ரயில்!
ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீற்றர் தூரம் வரை பயணித்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் வரை ஓட்டுநர் இல்லாமல் குறித்த ரயில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரயில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகவும், 5 ரயில் நிலையங்களைக் கடந்து சென்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ரயிலில் இருந்த சில அதிகாரிகளினால் ரயில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.