பாரதீய ஜனதா கட்சி வெற்றி : மாநில சட்டமன்ற தேர்தல்!
இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
தெலுங்கானாவில் வெற்றி பெற்றிருந்தாலும் வடக்கு மாநிலங்களில் காங்கிரசின் தோல்வி ராகுல் காந்திக்கு பின்னடைவைத் தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி 166 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
அத்துடன், காங்கிரஸ் 62 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.