வலுவடைந்த சூறாவளி 12km/h வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்வு!

நேற்று (04.12.2023) இரவு 20.39 மணிக்கு செய்யப்பட்ட ஆய்வின்படி, சூறாவளியின் தற்போதைய நிலைமை:

தெற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழ்நாடு கரையோரத்திற்கு அப்பால் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த சூறாவளியானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. (14.3N, 80.5E).

இது Nellore இருந்து தென்கிழக்காக 50km தூரத்திலும்,

Chennai இருந்து வடக்காக 130km தூரத்திலும்,

Bepatla இருந்து தெற்காக 180km தூரத்திலும்,

Machilipatnam இருந்து தெற்கு-தென்மேக்காக 200km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது மேலும் வடக்கு திசையில் சமாந்தரமாக மேலும் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கரையோரத்தில் Nellore இற்கும் Machilipatnam இடையில் நாளை முற்பகல் வேளையில் ஒரு ஆழ்ந்த சூறாவளியாக (Severe Cyclonic Storm) ஊடறுத்து செல்லும்.

இந்த சந்தர்ப்பத்தில் வீசுகின்ற காற்றின் வேகமானது 90km/h - 100km/h காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.