சந்திரயான்-3ன் லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி!
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
'பிரக்யான்' ரோவரை தாங்கிய 'விக்ரம்' லேண்டர், கடந்த ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
12 நாட்கள் ஆய்வு செய்து பல தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளதுடன் அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள கனிமங்கள் மற்றும் நில அதிர்வின் தன்மை உட்பட முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால், லேண்டர், ரோவர் என்பவற்றின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு உறக்க நிலைக்கு மாற்றப்பட்டது.
நிலவின் தென்துருவப் பகுதியில் நேற்றைய தினம் பகல் பொழுது ஆரம்பித்துள்ள நிலையில் வகையில் 'பிரக்யான்' ரோவரும் 'விக்ரம்' லேண்டரும், தானாகவே செயற்படக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு வானிலை சூழல்கள் சாதகமாக அமைய வேண்டும் எனவும் இஸ்ரோ அறிவித்திருந்தது.
இதனையடுத்து திட்டமிடப்பட்ட வகையில் உறக்க நிலையில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் மீள செயற்பட ஆரம்பித்துள்ளதா? என்பதை அறிவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தொடர்ந்தும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.