ரஷ்யாவிற்கு எதிரான கருத்துக்களையும் பொருளாதார தடைகளையும் ஆதரிக்க போவதில்லை!
ரஷ்யாவுக்கு தாம் எப்போதும் நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு தாம் எப்போதும் நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நினைவில் உள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.