மண்மேடு சரிந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி - உடுவரவில் சம்பவம்

மண்மேடு சரிந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி - உடுவரவில் சம்பவம்

நிலவும் சீரற்ற வானிலையால் ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன் போது வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தையும், ஒரு பெண்ணும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டின் உடமைகள் அனைத்தும் முற்றாக சேதமடைந்துள்ளதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குறித்த மண் மேடு சரிந்து பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.