வங்காள விரிகுடாவில் தீவிர காலநிலை - இந்தியாவில் 24 மரணங்கள்!
இந்தியாவில் மின்னல் மற்றும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் பிராந்தியத்தில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை தொடரும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீவிர காலநிலை காரணமாக ஏற்பட்ட மரணங்கள் தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு கடற்பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாகவே இந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.