அயோத்தி ராமர் கோயில்; கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது!

கருவறையில் பிரதமர் நரேந்திர மோடி சடங்குகள் செய்து கும்பாபிசேகம் நடத்தினார்.

அயோத்தி ராமர் கோயில்; கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது!

இதையடுத்து பால ராமரின் கண் திறக்கப்பட்டது. 

கடந்த 18 ம் திகதி கோயில்; கருவறையில் 5 வயதான குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. 

இந்த சிலையே இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டது.

கோயில் கருவறையில் உள்ள சிலைக்கு இன்று அர்ச்சகர்கள் பூஜை, சடங்குகள் செய்தனர்.. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று சடங்குகள் செய்தார். 

பிரதமர் மோடி 12.05 மணிக்கு கோயிலுக்குள் வந்தார்.

இந்தநிலையில் கும்பாபிசேகம் மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் நடைபெற்று முடிந்தது. 

இதில் 12.29 நிமிடம் 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம் என கூறப்படுகிறது. 

இந்த நேரத்திலேயே பால ராமர் சிலைக்கு பிரதிஸ்;டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடந்தது.