இந்தியாவில் உருவாகியுள்ள புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் 'இ.ந்.தி.யா?
இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I.N.D.I.A' எனப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I.N.D.I.A' எனப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
'இந்திய தேசிய ஜனநாயகம் உள்ளடக்கிய கூட்டணி' என்ற பெயரின் ஆங்கில சொற்களின் சுருக்கமாக I.N.D.I.A எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில், 'மோடி எதிர் இந்தியா' என்ற தேர்தல் கோஷத்துடன், பிராசாரங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் நோக்கில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கடந்த இரு தினங்களாக, பெங்களுரில் முக்கிய சந்திப்பை நடத்தியது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், மம்தா பேனர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் புதிய பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியோ அல்லது அதிகாரமோ முக்கியமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்பில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, மீண்டும் நரேந்திர மோடியே இருப்பார் என்பதை பாரதிய ஜனதா கட்சி பல தருணங்களில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.