வறிய மக்களை கருத்தில் கொண்டு நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும்!
நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில், மாற்றத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில், மாற்றத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், கல்வி நிலையங்கள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு முறைமைக்கு குறைந்த தாக்கம் ஏற்படும் வகையில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நாளை கூடவுள்ள ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.