கொட்டக்கலை ஆலயத்தில் யானை நடத்தப்பட்ட விதம் தொடர்பில் RARE SriLanka விசனம்!
ஹட்டன் - கொட்டக்கலை ஆலயமொன்றில் அண்மையில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் யானையொன்று நடத்தப்பட்ட விதம் தொடர்பில் யானைகள் நல அமைப்பான RARE SriLanka விசனம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் - கொட்டக்கலை ஆலயமொன்றில் அண்மையில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் யானையொன்று நடத்தப்பட்ட விதம் தொடர்பில் யானைகள் நல அமைப்பான RARE SriLanka விசனம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சரவை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அது தொடர்பான படங்களை சமூகவலைதலங்களில் பெருமையுடன் பதிவேற்றியிருந்தமை மேலும் கவலைக்குரிய விடயம் என்றும் அந்த அமைப்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அதன்பின்னர் தம்மை தொடர்பு கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், எதிர்வரும் காலங்களில் யானைகளை அவ்வாறான நிகழ்வுகளில் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஆலய நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியதாக RARE SriLanka அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மைய காலங்களில் இலங்கையில் பேசு பொருளாக இருந்த சக்சுரின் அல்லது முத்துராஜா என்ற யானை தொடர்பிலும் RARE SriLanka அமைப்பு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.