கணீர் குரல் ஓய்ந்தது - 6 மாதங்களாக புற்று நோயுடன் போராடிய செய்தி வாசிப்பாளர்  மரணம்!

கணீர் குரல் ஓய்ந்தது - 6 மாதங்களாக புற்று நோயுடன் போராடிய செய்தி வாசிப்பாளர்  மரணம்!

சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார். 

மரணம் என்பது யாருக்கு எந்நேரத்தில் வருகிறது என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் அண்மைக்காலமாக பல முக்கிய கலைஞர்களும், பிரபலங்களும் மறைந்து விட்டனர்.

அந்த வரி​சையில் சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் செய்தி அலைவரிசையில்  கம்பீரமான தமிழ் உச்சரிப்போடு செய்தி வாசித்து வந்த சௌந்தர்யா அமுதமொழி இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமாகினார்.

கடந்த ஆறு மாத காலமாக இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பில் 5. 51 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 50 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

ஆனாலும் நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்த சௌந்தர்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 

தன்னுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றிருந்த சௌந்தர்யாவின் மறைவு அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.