சுகாதாரத்துறையிடம் சிக்கிய 'Irfan Views' இர்பானுக்கு அழைப்பாணை!
பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் தளத்தை நடத்தி வருகிறார். விருந்தகங்கள், உணவகங்களில் உள்ள உணவுகளை பற்றி விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார்.
அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது.
இந்நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை அழைப்பாணை அனுப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் இர்பான்.
தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சட்ட நடவடிக்கைகள் தொடரும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.