தமிழ்நாட்டில் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு!

தமிழ்நாட்டில் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதாக்கட்சி 5 ஆசனங்களை கைப்பற்றும் என நியூஸ் 18 - சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அண்ணா திராவி முன்னேற்றக்கழகத்தை காட்டிலும் பாரதீய ஜனதாக்கட்சி தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணி மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.
இவற்றை தவிர, நாம் தமிழர் கட்சியும் தனித்து களத்தில் இறங்கியுள்ளது.
இந்தநிலையில் திராவிட முன்னேற்றக்கழகக்கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என்றும்,5 இடங்களில் பாரதிய ஜனதாவும்;, 4 இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியும் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.