நகைச்சுவை நடிகர் சேஷு வைத்தியசாலையில் அனுமதி
சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சேஷு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.