அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது ரஷ்யா!
உக்ரைன் மீதான போரில் வடகொரியாவினால் வழங்கப்பட்ட, ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த விடயம் தொடர்பில், அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத பரிமாற்றத்தை எளிதாக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் பொருளாதார விதிப்பதற்கான விவாதங்கள் அதன்போது முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.