மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு!

மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ரயிலை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.