ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 132 வது கல்லூரி தின விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்!

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 132 வது கல்லூரி தின விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்!

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஸ்தாபகர் தின விழா மற்றும் பரிசளிப்பு விழாவையும் மிக சிறப்பாக   நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.

குறித்த விழா ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளரும் காப்பாளருமான ஆர்.விஜேந்திரன்    வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எஸ் ராஜன் தலைமையில் நாளை (29) முற்பகல் 9.30 அளவில் ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த விழாவுக்கு அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.ரமேஸ், சிறப்பு அதிதியாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளருமான எஸ்.செந்தில்குமார் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் பாடசாலையில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ், பதக்கங்கள், பரிசில்கள் ஆகியன வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும் என அதிபர் குறிப்பிட்டார்.