சமிந்த விஜேசிறியின் பதவிக்கு நயன வாசலதிலக?
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்துடன் வெற்றிடமாகவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவிக்கு நயன வாசலதிலக இன்று (09) நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நயன வாசலதிலக 31,307 வாக்குகளைப் பெற்றார்.
நயனா வசலதிலக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதியின் பிரதான அமைப்பாளராகவும் உள்ளார்.
இதேவேளை சமிந்த விஜேசிறி தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்ததுடன் விசேட அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.