வெள்ளவத்தையில் பெருந்தொகை கொக்கேய்னுடன் 29 வயதான நபர் கைது!

வெள்ளவத்தையில் பெருந்தொகை கொக்கேய்னுடன் 29 வயதான நபர் கைது!

வெள்ளவத்தை - ஃபெட்ரிக்கா பாதையில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் ரக போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து சுமார் ஒரு கிலோகிராம் நிறையுடைய கொக்கேய்ன் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.