செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் - விரைவில் நடவடிக்கை!

செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் - விரைவில் நடவடிக்கை!

வவுனியா - செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில், தற்காலிக பணிப்பாளர் ஒருவரே  நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிரந்தர பணிப்பாளர் ஒருவர் இன்மையினால் வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் குறித்து,  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத் துறையில் சுமார் 100 வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக குறிப்பிட்டார்.

நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் காரணமாக அவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க முடியாதிருந்தது.

எனினும், தற்போது குறித்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவுப் பெற்றுள்ளன. 

இந்த நிலையில், அடுத்தவாரம் முதல் நேர்முகத் தேர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து,  வவுனியா - செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு புதிதாக நிரந்தர பணிப்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.