பொசன் பௌர்ணமியை முன்னிட்டு விசேட தேவையுடைய சிறுமிக்கு சக்கர நாட்காலி!

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு விசேட தேவையுடைய சிறுமிக்கு சக்கர நாட்காலி!

நுவரெலியா மாவட்டத்தின் கெப்ரிகோன்  சர்வதேச பாடசாலையினால்  ஜூன் 21  பொசன் போயா தினத்தை முன்னிட்டு நேற்று 27 ம் திகதி விசேட தேவையுடைய ஆறு வயது சிறுமிக்கு சக்கர நாட்காலி ஒன்றை பெற்றுக்கொடுத்தாக பாடசாலையின்  அதிபர் ஜெயசக்தியவாணி தெரிவித்ததார்.

ஒவ்வொரு வருடமும் பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு கால்நடைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் இவ்வருடம் 7 வது தடைவையாக விசேட தேவையுடைய சிறுமி ஒருவருக்கு சக்கர நாட்காலி பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏ.எஸ்.டப்ளியு, எஸ்.பண்டார,  கிராம சேவக அதிகாரி குழந்தைவேல், மத குருமார்கள்,  பாடசாலை அதிபர் ஜெயசக்தியவாணி , பாடசாலை நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.

இதன்போது மதபோதகர்கள்  சிறுமியை ஆசீர்வதித்தமையும் குறிப்பிடத்தக்கது.