கணிதச் சமர் வல்வெட்டித்துறையில்...

கணிதச் சமர் வல்வெட்டித்துறையில்...

வல்வெட்டித்துறையில் 05.05.2023 அன்று நடைபெறவுள்ள இந்திர விழாவினை முன்னிட்டு சிதம்பரா கணிதப் போட்டிக்குழு நடாத்தும் கணிதச்சமர் வினாடிவினா போட்டியில் பங்குபற்றி உடனடி பணப்பரிசில்களை வென்றிட வல்வெட்டித்துறை சந்தியில் அமைக்கப்படவுள்ள எமது போட்டி மையத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை வருகை தரவும். தரம் 4 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும். போட்டிக்கான பதிவுகள் மாலை 5.00 மணியளவில் ஆரம்பிக்கும்.

சிதம்பரா கணிதப் போட்டிக்குழு