சிங்கராஜவில் மூலிகைகளை களவாடிய ஜப்பான் பிரஜை கைது!
சிங்கராஜா வனாந்தரத்தில் மூலிகை செடிகளை களவாக கழற்றிய ஜப்பான் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்ஙராஜா வனாந்தரத்தில் களவான வனப்பகுதியில் தேசிய மூலிகை செடிகளை கழற்றி கொண்டு செல்வதற்கு தன் வசம் வைத்திருந்த ஜப்பான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 44 வயதுயவர்l என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் உள்ள விருந்தகம் ஒன்றில் மூன்று நாட்கள் தங்கி இருந்த ஜப்பான் பிரஜை சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள தேசிய மூலிகை செடிகளை கழற்றி கொண்டு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது கைது செய்யப்பட்டதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த ஜப்பான் பிரஜையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தேசிய மூலிகை செடிகள் சில அரிய வகையானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஒரு சில மூலிகை செடிகளை பரிசோதனை செய்து.
அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு பேராதனை வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாடி உள்ளதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.