எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அதிகூடிய மழை

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அதிகூடிய மழை

எதிர்வரும் 07, 08, 09ஆம் திகதியளவில் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி உருவாகி, தாழ்வு பகுதியாக வட இலங்கைக்கு மேலாக தமிழ்நாடு நோக்கி வரும் சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி காற்று சுழற்சியாக வங்காள விரிகுடா அந்தமான் கடல் பிராந்தியத்தில் உருவாகி, தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ள இந்த நிகழ்வானது,

மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அது தற்போது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்வதன் காரணத்தினால் இந்த நிகழ்வினால் எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி இந்த காலப்பகுதியில் நமது பகுதிகளுக்கு *பெரிதளவான* மழை இருக்காது 

அத்துடன் இடையிடையே ஓரளவு மழை சில நாட்களுக்கு காணப்படும்.

இது குறிப்பிட்ட அதே காலப்பகுதியில் தீவிர காற்றழுத்த பகுதியாக வலுவடைந்து பின்னர் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well Marked Low Pressure Area) மேலும் வலுவடைந்து, ஆந்திர பிரதேசத்தின் கரையோரத்தை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளை கடந்து சிட்டகன் பகுதியினூடாக ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.