26 வயது பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

சீதுவ பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றிரவு விடுதி ஒன்றின் அறைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பலுகொல்லாகம - மெகொடவெவ பகுதியில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகாத உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.