வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி - போலி பெளத்த பிக்கு கைது!
மல்வத்து மகாநாயக்க தேரரைப்போல் உரையாடி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக போலியான தகவல்களை வழங்கிய பெளத்த பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரரைப்போல் உரையாடி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக போலியான தகவல்களை வழங்கிய பெளத்த பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பகுதியில் வசிக்கும் ஒருவரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர் காலி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தற்காலிகமாக அவர் பிலிமத்தலாவை பகுதியில் வசித்துவருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் மற்றும் காணி விற்பனை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவரும், விளம்பரங்களில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு மகாநாயக்கதேரரை போன்று தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
பின்னர் குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதுடன் நுவரெலியா நீதிவானிடம் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.