Breaking News : சில எரிபொருளின் விலைகள் குறைப்பு!

சில எரிபொருட்களின் விலைகளை இன்று [30] நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 423 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 426 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 329 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 431 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 434 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 249 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 247 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.