எரிபொருள் விலைகள் அதிகரிப்பு : அனைத்து நிறுவனங்களும் விலை பட்டியலை வெளியிட்டன!

எரிபொருள் விலையில் இன்று(1) மாலை முதல் அமுலாகும் அதிகரிப்பை மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலையில் இன்று(1) மாலை முதல் அமுலாகும் அதிகரிப்பை மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாயாகும்.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேவேளை, இலங்கை பெட்ரோலிய  கூட்டு தாபனமும் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 365 ரூபாய்) 

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 420 ரூபாயாக விற்கப்படுகிறது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 351 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 421 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேவேளை மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலை 11 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 242வாக விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்திற்கு இணையாக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.