கொட்டகதெனிய மரக்கறி  தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!

கொட்டகதெனிய மரக்கறி  தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!

கம்பளை  தவுலகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கொட்டகதெனிய  பிரதேசத்தில் உள்ள மரக்கறி  தோட்டத்தில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடுகன்னாவ முதலிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த   கே.ஜீ.விஜேரத்தின (62) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் கடந்த 18ம் திகதி தவுலகல  கொட்டகதெனிய  பிரதேசத்தில் பிறிதொருவரை சந்திக்க சென்றிருந்தாக கூறப்படுகிறது. 

அங்கிருந்து மறுதினம் கடுகன்னாவ பிரதேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அந்த வீட்டுக்கு அருகில் உள்ள கத்திரிக்காய் தோட்டத்தில்   திருட்டுத்தனமாக கத்திரிக்காய் பிடுங்குவதற்கு சென்று அங்கு உள்ள கத்திரிக்காயும் பிடுங்கி உள்ளார். 

இந்த நிலையில்  தோட்டத்தில் போடப்பட்டு இருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று காலை கத்திரிக்காய் தோட்டத்தில் வேலை செய்ய வந்த இரண்டு தொழிளாலர்கள் தோட்டத்தில் சடலத்தை கண்டு தவுலகல பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்  தனிமையில் வசித்து  வந்த நிலையில் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.