வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட கொம்மாதுறை மேற்கு மக்கள்!

நிகழும் சீரற்ற காலநிலையால் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வௌ்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொம்மாதுறை மேற்கு 196 A கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 51 உறுப்பினர்கள் கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.