டி.சிவராம் நினைவுக் கட்டுரைகள் அடங்கிய 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் - இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி எனும் நூலின் வெளியீட்டு

டி.சிவராம் நினைவுக் கட்டுரைகள் அடங்கிய 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் - இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொகுப்பில் ஊடகத்துறை ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் என 41பேர் எழுதிய கட்டுரைகள் உள்ளடங்குகின்றன.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஊடகவியலாளர் சபீனா சோமசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்துவார். நூல் அறிமுகத்தினை மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் நிகழ்த்துவார்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 

அத்துடன், காத்தான்குடி நகர சபை நூலகர் திருமதி க.ருத்ரகுமார், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆர்.பாரதி, ஆகவே ஜபார், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெர்டி கமகே ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.  

நிகழ்வின் நிறைவாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் வ.சக்திவேல் நன்றியுரையைற்றுவார்.              

இந்த தொகுப்பில், 

01. சிவராம்: பன்முக ஆளுமை - பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

02. சிவராம்: நினைவெழுதல் - பேராசிரியர் உ.சேரன்

03. ஆய்வறிவுப் புலமை மிகுந்த ஊடகவியலாளன் - பேராசிரியர் சி. மௌனகுரு

04. சிவராமும், மட்டக்களப்பு வாசகர் வட்டமும் - ப.மகாதேவா

05. பத்திரிகையாளர் டி.சிவராம் - ஒரு சிறு நினைவுக் குறிப்பு - எஸ்.கே.விக்னேஸ்வரன்

06. பூகோள அரசியலில் ஈழத் தமிழர் நலன்கள் : சிவராமின் புரிதலும் வெளிப்படுத்தலும் - பேராசிரியர் சி. ரகுராம்

07. தராக்கியின் ஊடகவெளியும் தமிழர் சமூகவெளியும் - தெ.மதுசூதனன்

08. ஊடகப் போராளியான உண்மைப் போராளி - வீ.தேவராஜ்

09. எனது பார்வையில் சிவராம் – நிலாந்தன்

10. இலங்கையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வு - இரவி அருணாசலம்