நாம் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தால் ஐக்கியப்பட்ட நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

நாட்டின் ஆட்சியாளர்கள் போட்டிக்கு மத ஸ்தலங்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். எமது நாட்டிற்கு பௌத்தம் கிட்டிய மிஹிந்தலை புனித ஸ்தலத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ஆனால் நடைமுறை பௌத்தர்களாகிய ஐக்கிய மக்கள் சக்தியாகிய எங்களால் அந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வை வழங்க முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சம்புத்த சாசனத்திற்கு நமது நாட்டின் உச்சபட்ச சட்டமான அரசியலமைப்பில் விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அது எந்த அளவிற்கு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று (16) நடைபெற்ற நாகரீகமான சமூகத்திற்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் மாவட்ட அமர்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது நாட்டில் 14108 விகாரைகள் உள்ளன. 10347 விகாரைகளில் அறநெறி போதனை இடம்பெற்று வருகிறது. 824 பிரிவெனாக்கல் உள்ளன. விகாரைகள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மையமாகக் கொண்டு சமூக, சமய அபிவிருத்தி, ஒழுக்கமான, நீதியான, நாகரீக, அறிவொளி மற்றும் செழுமை மிக்க  குடிமக்களை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் பிரதான பங்கு வகிக்கும் விகாரைகள், மகா சங்கத்தினரையும் சக இன மதஸ்தலங்களையும் பாதுகாக்கும் பயணம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மகாசங்கத்தினர் அரசியல் வாதிகளின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து அரசியல்வாதிகளின் அனுசரணையை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து அவர்களை விடுவித்து இலங்கையின் விகாரை கட்டமைப்பை பாதுகாக்க புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள விகாரைகள் அடங்களான மதஸ்தலங்கள் பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இவ்வருட இறுதிக்குள் விகாரைகள் மற்றும் ஏனைய சமய வழிபாட்டுத் தலங்களில் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டு வருமானம் ஈட்டக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கலாசார சுற்றுலாத்துறையை மையமாக வைத்து மத வழிபாட்டு கட்டமைப்பை பலப்படுத்தினால், பல்வேறு குறைபாடுகள் மற்றும் பாராபட்சம்  கவனிப்புகளுக்கு உள்ளான மத வழிபாட்டு தலங்களை சர்வதேச ஒத்துழைப்புகள் ஊடாக  பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதோடு விசேட ஒருங்கிணைந்த கலாசார சுற்றுலா வேலைத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
பௌத்த நாட்டிலும் விகாரைகளை மூடும் நெருக்கடி நிலவி வருவதால் விகாரைகளுக்கு சுதந்திரமான பொருளாதார பலத்தை உருவாக்க விசேட வேலைத்திட்டமொன்றின்  தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நல்லொழுக்கமுள்ள ஸ்மார்ட் இளைஞர்கள் நல்லொழுக்கமுள்ள ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்கும் சமுதாய மையங்களாக கிராமிய,நகர மத வழிபாட்டுத் தலங்களை மாற்றுவோம். இதன் மூலம் நாகரீகமான ஒழுக்கமான, நீதியான, சகிப்புத்தன்மையுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கான பிரதான பொறிமுறையாக இந்த மதஸ்தலங்களை மாற்றியமைப்போம். ஏனைய மத வழிபாட்டுத் தலங்கள் இச்செயற்பாட்டிற்குப் பயன்படுத்தி இன, மத, சாதி, வர்க்க பேதமின்றி இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாடு உண்மையிலேயே ஐக்கியப்பட்ட ஒன்றுபட்ட நாடாகும். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் ஒரு ஐக்கிய நாடாக தேசிய மற்றும் மத ஒற்றுமையை வலுப்படுத்தும் பொறுப்புக்கு நாமனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.