தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம் 11,000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.