"ஜனாவின் வாக்குமூலம்" மணி விழா மலர் வெளியீடு!

"ஜனாவின் வாக்குமூலம்" மணி விழா மலர் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் (ஜனா) 60வது பிறந்த தினம் மற்றும் போராட்ட, அரசியல் வாழ்வில் 40 வருட பூர்த்தி என்பவற்றை சிறப்பிக்கும் முகமாக "ஜனாவின் வாக்குமூலம்" மணி விழா மலர் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.