அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!
வைத்தியர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினரானதில் இருந்து அநாகரிகமான செயல்கள் பலவற்றை செய்து வருகிறார். அவை அனைத்தையும் வரிசையிட்டு பார்க்கலாம்.
முதலாவது நாடாளுமன்ற முதல் அமர்வில் நாடாளுமன்றை காணொளி வாயிலாக காட்டியது மட்டும் அல்லாது எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற உத்தியோகத்தருடன் வாக்கு வாதப்பட்டார்.
அதில் வேறு தமிழன் என்று ஒரு போலி பெருமிதம் காட்டினார். உண்மையான தமிழன் இவரை போல் விளம்பரம் மூலம் தன்னை அடையாளப்படுத்த மாட்டான் அதுவே நிதர்சனம்.
இது நடந்து அடுத்த சில தினங்களில் அவர் மீது சி.ஐ.டியில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அரசு மௌனம் காத்தது.
இரண்டாவது தனக்கான உரையாடல் நேர ஒதுக்கீடு பற்றி பேச எதிர்க்கட்சியினருடன் சண்டையிட்டு அவர்கள் தன்னை தாக்கியதாக மன்றில் பொய்யும் உரைத்தார்.
அந்த சம்பவம் தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை.
இதனிடையில் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்மீது பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டன. அவை அனைத்தும் கிடப்பில் இருப்பதாக புலனாகிறது.
இதனிடையே, மட்டக்களப்பு மக்கள் தன்னை உதவிக்கு அழைப்பதாக அண்மைய நாட்களில் காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார். அப்பதிவில் இவர் "பேச்சுப் பீரேங்கி"என்று சாணக்கியன் எம்.பியை நக்கலாலாக குறிப்பிட்டு இருந்ததயும் கவனிக்க முடிந்தது.
இவரை உதவிக்கு அழைக்கும் அளவிற்கு அங்குள்ள மக்கள் அரசியல்வாதிகள் இல்லாமல் அனாதரவாக நிற்கவில்லை என்பது கருத்து.
நேற்று முன்தினபம் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை அத்துமீறி உள்ளே சென்று அவரது பணிக்கு இடையூறு செய்தது மட்டுமல்லாமல் தன்னை ஆங்கிலத்தில் "சேர்" (எனக்கு அடிமையாக இரு - Slave I Remind) என்று அழைக்கும் படி வற்புறுத்தும் காணொளியையும் இவரே பதிவிட்டும் இருந்தார்.
இது சம்பந்தமாக முறைப்பாடு ஒன்றை பணிப்பாளர் பொலிஸில் பதிவு செய்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து நடந்த விடயங்கள் அனைத்தையும் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
இவை அனைத்தையும் கூர்ந்து அவதானிக்குமிடத்து அரசு ஏன் இன்னும் வைத்தியர் அர்ச்சுனா விடயத்தில் மௌனம் காக்குறது ஏன் அர்ச்சுனாவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைப்பதும், கோமாளி போல் நடந்து கொள்வது மட்டும் அல்லாது அடுத்த மாகாணங்களில் உள்ள அரசியல் தலைவர்களை வம்புக்கிழுப்பதும் மிகவும் சிறுபிள்ளைத்தனமான செயல் மட்டுமல்லாது இவரை யாரோ வழிநடத்துவது தெட்ட தெளிவாகின்றது.
இவருடைய செயல்கள் வடிவேல் பாணியில் "கடுப்பேத்துறான் மைலோட்" என்பது போல் உள்ளது.