கெஹெலிய நீதிமன்றில் மனு தாக்கல்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமக்கு பிணை வழங்குமாறு கோரியே அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.