பண்டிகை காலத்தில் விசேட ரயில் சேவைகள் அமுல்

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் நீண்ட தூர ரயில் சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் விசேட ரயில் சேவைகள் அமுல்

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் நீண்ட தூர ரயில் சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை - பதுளை, கண்டி - பதுளை மற்றும் அனுராதபுரம் - காங்கேசன்துறை வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை முதல் 25 ஆம் திகதி வரை பதுளையில் இருந்து காலை 5.20 மணிக்கு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.