ஜனாதிபதித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

ஜனாதிபதித் தேர்தலை சாத்தியமான ஒரு நாளில் விரைந்து நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மேலும் தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு அதிகபட்ச சட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென்றும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.