வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா  தோனிக்கல் பகுதியில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றனர்.

43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.