பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!
![பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ac1beb5caf1.jpg)
பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
இது திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய இடமாற்றத்தைக் குறிக்கிறது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடமாற்றத்தில் 105 தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (CIs) மற்றும் 34 பொலிஸ் பரிசோதர்கள் (IPs) உள்ளனர்.
இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக அமலுக்கு வருகின்றன.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான OIC கள் சேவைத் தேவைகளின் அடிப்படையில் பொது கடமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது
.