சதோசாவில் மலிவான விலையில் மீன்கள் விற்பனை!

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்தில் விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் கடந்த 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீர்கொழும்பு, கம்பஹா பிரதேச முகாமையாளர் மற்றும் ஊழியர்களினால் வழிநடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் விசேட குலுக்கல் சீட்டிழுப்பும் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்ட திட்டமாக 300-400 கிராம் அளவிலான சிறிய பதப்படுத்தப்பட்ட மீன் பொதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.