தலவாக்கலையில் நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை
தலவாக்கலை நகரில் நேற்றிரவு (10) நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை நகரில் நேற்றிரவு (10) நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை இடப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள மருந்தகம், வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம், மூலப்பொருட்கள், உபகரண மற்றும் இயந்திராதிகள் விற்பனை நிலையம், வாகன சில்லுகள் விற்பனை கடை ஆகியனவே இனந்தெரியோதாரால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள், உபகரண நிலையத்தில் இருந்த மூன்று இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அதேவேளை ஏனைய கடைகளில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.