மின்விசிறி வீழ்ந்ததில் 2 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி - அஸ்கிரிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு மாணவனுக்கு கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.