விபத்தில் சிக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி!

விபத்தில் சிக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி!

கெக்கிராவ - கனேவல்பொல வீதியின் அம்குகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

கெக்கிராவ பெஸ்டியன் சில்வா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்ற குசல யுகத் சஞ்சீவ என்ற  மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் பாட்டியின் பராமரிப்பில் கல்வி கற்று வந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.